Thursday, August 31, 2017

16 வயதினிலே!
வாழ்வின் முதல் பதினாறு வருடங்கள் ஒரு முக்கியமான விஷயமே. ஒருவரின் வாழ்க்கை பயணத்தின் சுவையான கட்டத்தை ஒருவர் அடையும் பருவம் என்றும் சொல்லலாம். 16 வருடங்களுக்கு முன் சத்யாவின் அம்மா லலிதா 'என்ன தவம் செய்தனை யசோதா' என்ற பாடலை பாடிக்கொண்டிருக்க தனது 6 வயதில் அந்த பாடலை தன் கீபோர்ட் கருவியில் வாசித்தான். அவன் வாசிக்க கேட்ட அவன் அம்மா வழி தாத்தா, பாட்டி மற்றும் நான் இதற்கு எப்பொழுதும்போல் ஒரு சபாஷ் என்றோம்.
சில மணித்துளிகளுக்கு அப்பால் சத்யா எப்பொழுதும் இசைக்கும் மேற்கத்திய இசையோ, திரை இசையோ இது இல்லையே என்று எண்ணினேன். ஏனென்றால் அவன் அந்த காலங்களில் அவன் கற்று வந்த மேற்கத்திய இசையையும் தானே முனையும் திரையிசை பாடல்களையும் வாசிப்பது சகஜம். இன்று கர்நாடக இசையை சத்யா அவன் அம்மாவின் குரலில் வந்த வார்த்தைகளை ஸ்வரப்படுத்தி அதன் சாராம்சம் மாறாமல் கொடுத்ததை உண்னர்ததேன்.
உடன் எனக்கு சத்யாவை கர்நாடக இசையை இந்த மேற்கத்திய கருவியில் பலர் முன்னிலையில் வாசிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியது. உடன் என் மாமனார் உதவியுடன் நாதோபாசன என்ற அமைப்பிடம் கேட்க அதன் தலைவர் திரு. ஸ்ரீனிவாசன் சரி என்று சொல்ல சத்யா தன் முதல் கச்சேரியை 9 டிசம்பர் 2001-ல் 30 நிமிடங்களுக்கு வாசித்தான். மல்லாரி என்ற ஒரு உயர்ந்த உருப்படியில் ஆரம்பித்து பாக்கியதாலக்ஷ்மி என்ற பாடலுடன் நிறைவு செய்தான். குரு குமாரி கன்னியாகுமரி அவர்கள் க்ரியபடி தபேலா இசைக்கலைஞர் திரு. சுந்தர் இந்த கச்சேரியை மேன்மைப்படுத்தினார் .
நல்லோர் வாக்கு என்றும் நன்மைபயக்கும் என்ற வாக்கியத்திற்கேற்ப அன்று வந்து கீபோர்டில் கர்நாடக இசையை கேட்ட அனைவரும்
சத்யாவை வாழ்த்தி ஆசிர்வதித்தனர். முத்தாய்ப்பாக வாலின் மேதை சங்கீத கலாநிதி திரு M. சந்திரசேகரன் அவர்கள் இந்த கச்சேரிக்கு வருகைபுரிந்து சத்யாவின் இசையை கேட்டு, இந்த மாதிரி 6 வயதில் மல்லாரி போன்ற உருப்படியை ஒரு மின் இசை கருவியில் வசிப்பது என்றால் இது போன ஜென்மத்தின் விட்ட குறை தொட்ட குறையாகத்தான் இருக்க முடியும் என்றார். மேலும் இந்த புதிய கருவியில் நீ ஒரு சிறந்த பயிற்சியை பெற்று ஒரு உன்னத நிலை அடையவேண்டும் என்றும் என்று வாழ்த்தினர்.அந்த வாழ்த்து என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. 

ஆம்! பதினாறாவது ஆண்டான 20017-ல் வரும் செபேட்ம்பர் 3-ம் தேதி, கலைகளுக்கு, முக்கியமாக இசைக்கு சான்றளிக்கும் இந்தியாவின் மிக பெரிய நிறுவனமான ஆல் இந்தியா ரேடியோவில், அதன் தேசிய நிகழ்ச்சில் சத்யாவின் கீபோர்டு இசை கச்சேரி இரவு 930-11க்குள் ஒலிபரப்பாக உள்ளது.
இந்த சங்கீத பயணத்தில் எங்களுக்கு ஒத்துழைத்து, ஆதரவு அளித்து, மேன்மைப்படுத்திய நல் உள்ளங்களுக்கும், அமைப்புகளுக்கும், சக வித்வான்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகுக.

மேலும் எங்கள் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவும் வழிகாட்டுதலை செய்துவரும் ஆசிரியர்களுக்கும் நல் உள்ளங்களுக்கும் எங்களது சிரம்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்.

Do tune into All India Radio on 3rd September to listen to this historic broadcast at 930pm.


Its a new effort on Sathya to turn his focus and exhibit same to the general public in order to reach MASS in the right perspective.

This is  indeed an interesting presentation of film, classical, fusion YogaMusic and his own composition along with one of the leading bands - STACCATO led by RH Vikram, a new age Music Director.

Do drop in and enjoy the evening and look forward to all your wishes and blessings.