skip to main
|
skip to sidebar
Carnatic on Keyboard
Saturday, December 10, 2011
Album Release Photos
இனிய சனிவாரம் காலை , இசை இதயத்தை தொட்ட நாள், சனிக்கிழமை திருப்பதி பெருமாளுக்கு உகந்த நாள் அதனால் தானோ என்னவோ திரு கிருஷ்ணபாபு திருப்பதி தம்பதியர் தங்கள் செல்ல மகன் சத்யநாராயணனின் இசை தொகுப்பு (Musical Album) வெள்யீட்டு விழாவை இன்று அமைத்திருந்தனர். காலை 8.55 AM க்கு நிகழ்ச்சி துவக்கம் சிற்றுண்டி அருந்த நேரமின்மை
யால் நேரே அரங்கத்துக்கு சென்றோம் ப்ருமகான சபா, லஸ் கார்னர் , உள்ளே நுழைந்ததும் தம்பதியர் அனைவரையும் இன்முகம் காட்டி வரவேற்றனர்.
செவிக்கு உணவில்லாத பொழுதுதான் சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் இது சொல் வழக்கு, ஆனால் இவர்களோ உள்ளே நுழைந்ததும் சிறிது வயிற்றிற்கு அருந்திவிட்டு உள்ளே செவி இன்பத்தை பருகலாம் என்று அன்புக்கட்டளை. அரங்கத்தில் அந்த காலை நேரத்தில் நல்ல கணிசமான ரசிகர்கள், நண்பர்கள், ஊடக உறவுகள் என அனைவரும் நிறைந்திருந்தனர்..
திரு ரங்கநாதன் அவர்கள் நிகழ்ச்சியை மாலையாக தொடுத்துகொண்டிருந்தார், தொகுத்து வழங்கினார். சத்யநாராயணன், அடையாறு பாலசுப்ரமணியம் - நாதஸ்வரம் , செந்தில் குமார் தவில், சுவாமிநாதன் மிருதங்கம் இசை வெள்ளத்தில் அனைவரையும் கரைக்க ஆரம்பித்தனர், மல்லாரி , ராகமாலிகா, ராகமாலிகை, சின்னஞ்சிறுகிளியே பாடல் அனைவரையும் மெய்மறக்க செய்தது. வயலின் மேதை திரு சந்திரசேகர் அவர்கள் முன்னமே வந்து இசையை ரசித்துகொண்டிருந்தார் மிருதங்க வித்வான் டாக்டர் உமையாள்புரம் சிவராமன் அவர்களும் திரு நடராசன், முன்னாள் தொலைகாட்சி இயக்குனர், அவர்களும் வந்து விழாவை சிறபிக்கச் செய்தனர்.. கிரிட்ரேடிங் நிறுவனமும் பிரம்மகான சபாவும் சத்யநாராயணனின் இசை தொகுப்பை (MUSICAL ALBUM).வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
விழாவில் வயலின் மேதை திரு M.சந்திரசேகர் அவர்கள் சத்யனாரயணனை மனதார பாராட்டி, தான் பேசும்பொழுது கூட வாய் பேசுகின்றது ஆனால் தன்னுடைய காதுகள் இன்னும் மல்லாரியில் மயங்கி கொண்டிருக்கின்றது என்று கூறி சத்யாவை மனதார வாழ்த்தினார் . மிருதங்க வித்வான் டாக்டர் திரு உமையாள்புரம் சிவராமன் அவர்கள் சத்யாவின் இசை ஆற்றல், இளம் வயது சாதனைகளை வெகுவாக பாராட்டி, சத்யாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோரையும் பாராட்டினார். மழலைகள் இசை என்றாலே மனம் மகிழும், சத்யா மழலை பருவம் முதல் இசைமழளைகளின் அரவணைப்பில் வளர்ந்து இன்று இமயம் தொட புறப்பட்டிருக்கும் சத்யனாராயணனை ராம்ஜி இசை மழலை Ramjhi Isaimhalai அவர்கள் வெகுவாக பாராட்டி சத்யாவின் தொடர் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். திரு நல்லி குப்புசாமி அவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் முன்னமே வந்து சத்யனாரயணனை வாழ்த்தி சென்றார். நேரமின்மை காரணமாகவும் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற காரணங்களும் அவரை துரிதப்படுத்தியத்தை உணரமுடிந்தது தகவல் களஞ்சியம் திரு நடராசன் முன்னாள் தொலைகாட்சி இயக்குனர் அவர்கள் சத்யாவின் ஆரம்பநாள் முதல் அவரது வளர்ச்சியை கண்டு பெருமைகொண்டு, அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினார் .
விழாவில் சத்யாவின் நான்கு இசை குறுந்தகடுகள் வெளியிடப்பட்டது அவற்றை சத்யாவின் வெற்றிப்படிகளுக்கு வழியாக இருந்தவர்கள் முறையே கௌரவிக்கப்பட்டு அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது . இறுதியில் சத்யநாராயணன் தனது நன்றி கலந்த வணக்கத்தை ஒவ்வொருவருக்கும் தெரிவித்துகொண்டார், விழாவில் நாதஸ்வர வித்வான் அடையாறு பாலசுப்ரமணியன், தவில் வித்வான் செந்தில்குமார், மிருதங்க வித்வான் சுவாமிநாதன் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்
By:
Vasan Srini
1 comment:
Vasan
said...
Congrats Sathya, God bless you for more and more credits to you
Sunday, December 11, 2011 12:01:00 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Who is Sathya
KeyboardSathya
View my complete profile
UA & Canada Tour 2009
Important Links
Video Samples
Sathya's blog
Reviews on Sathya
Keyboard Sathya
http://pagadaipost.blogspot.com/
carnaticsangeetham.com
Audio Sample Tracks of Sathya
Previous Posts
►
2017
(6)
►
December
(2)
►
August
(2)
►
May
(1)
►
January
(1)
►
2016
(13)
►
December
(2)
►
November
(8)
►
April
(1)
►
March
(1)
►
January
(1)
►
2015
(1)
►
January
(1)
►
2014
(9)
►
December
(1)
►
September
(1)
►
June
(1)
►
May
(1)
►
February
(2)
►
January
(3)
►
2013
(11)
►
December
(6)
►
November
(1)
►
October
(3)
►
April
(1)
►
2012
(15)
►
December
(4)
►
July
(1)
►
June
(2)
►
May
(4)
►
March
(1)
►
February
(3)
▼
2011
(24)
▼
December
(6)
A great day for Music lovers and Keyboard Artists ...
Album Launch Videos 2011
Album Release Photos
Album Release on 10th December, 2011 - Invitation
Concert for BVB
Welcome December 2011
►
September
(5)
►
June
(2)
►
April
(3)
►
March
(6)
►
February
(2)
►
2010
(30)
►
December
(7)
►
October
(2)
►
September
(1)
►
August
(8)
►
July
(1)
►
June
(1)
►
May
(2)
►
April
(2)
►
March
(1)
►
February
(1)
►
January
(4)
►
2009
(43)
►
December
(10)
►
November
(3)
►
October
(1)
►
September
(2)
►
July
(1)
►
June
(2)
►
May
(11)
►
April
(7)
►
January
(6)
►
2008
(53)
►
December
(8)
►
October
(3)
►
September
(5)
►
August
(2)
►
July
(1)
►
June
(2)
►
May
(3)
►
April
(6)
►
March
(4)
►
February
(6)
►
January
(13)
►
2007
(81)
►
December
(11)
►
November
(2)
►
October
(4)
►
September
(3)
►
August
(5)
►
July
(2)
►
June
(4)
►
May
(6)
►
April
(17)
►
March
(5)
►
February
(15)
►
January
(7)
►
2006
(131)
►
December
(15)
►
November
(15)
►
October
(5)
►
September
(8)
►
August
(9)
►
July
(9)
►
June
(14)
►
May
(19)
►
April
(10)
►
March
(6)
►
February
(16)
►
January
(5)
►
2005
(11)
►
December
(11)
1 comment:
Congrats Sathya, God bless you for more and more credits to you
Post a Comment